அனைத்து வலைப்பதிவு உள்ளங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
வெள்ளி, 16 அக்டோபர், 2009
செவ்வாய், 13 அக்டோபர், 2009
australia
கொஞ்சம் கூட தோழமையில்லாத, பாதுகாப்பற்ற நகரங்களாக இந்த இரு நகரங்களையும் வெளிநாட்டு மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள்
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு மாணவர்களில்பெரும்பாலானோர் இந்த இரு நகரங்களும் வசிக்கவே லாயக்கில்லாத, பாதுகாப்பற்ற, கொஞ்சம் கூட தோழமை உணர்வு இல்லாத நகரங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் வெளிநாட்டினர் மீது கொஞ்சம் கூட நட்போ, பாசமோ காட்டுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களுக்கு அடுத்த வரிசையில், பெர்த், பிரிஸ்பேன், அடிலைட் ஆகிய நகரங்கள்
வெள்ளி, 9 அக்டோபர், 2009
திருமண நாள்
புதன், 30 செப்டம்பர், 2009
தாய் பாசம்
திங்கள், 28 செப்டம்பர், 2009
பாரசூட்
வியாழன், 24 செப்டம்பர், 2009
மணல் புயல் காற்று{ஆஸ்திரேலியா }]
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மணல் புயல் வீசி வருகிறது. இதனால், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால், திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல நகரங்கள் மணல் புயலால் சூழப்பட்டுள்ளன. இதனால், சிட்னி நகர விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. குழந்தைகள், பெரியவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் இந்த மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.நேற்று முன்தினம் துவங்கிய மணல் புயல் இன்று வரை நீடிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. விளைநிலங்களில் டன் கணக்கில் மணல் படிந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோதுமை விளைச்சல் இதனால் பாதிக்கப்படுமா என்பது பற்றி இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் தெரியும்.
புதன், 23 செப்டம்பர், 2009
குடும்பம் கலைக்கும் விபசாரி {நடிகை }
| |
என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்... |
|---|
பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி. அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்? ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்? நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும். நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன். மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத். உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து! |
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
கமல்
கமல்-மோகன்லால் நடித்துள்ள உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை முன்னிட்டு இணையதள செய்தியாளர்களை கமல் இன்று சென்னை சவேரா ஓட்டலில் சந்தித்தார்.உன்னைப்போல் ஒருவனில் வெடுகுண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்குதாமே?
இது வெடிகுண்டு நடக்காத தேசம் அல்ல. இனியும் பெரிய அளவில் நடக்கும். அப்படி நடக்காமல் இருப்பதற்காக ஒரு முன்னெரிக்கை மணி அடிக்கத்தான் வருகிறது உன்னைப்போல் ஒருவன்.
மருதநாயகத்தை தவிர உங்கள் ஏமாற்றம் வேறு என்ன?
என்ன...மருதநாயகம் எனக்கு ஏமாற்றமா. எனக்கு இல்லை. உங்களுக்குத்தான் ஏமாற்றம். என்றாவது மருதநாயகம் வரும். அதனால் உங்களூக்கும் ஏமாற்றம் என்று சொல்ல முடியாது.
விஜய்,அர்ஜூன்,பிரபு என்று வரிசையாக அரசியலுக்கு வருகிறார்களே. உங்களுக்கு ஐடியா இல்லையா?
அரசியல் எனக்கு போரடித்துவிட்டது. அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும். இவன் எப்படி இப்படி பேசலாம் என்று விமரிசனங்கள் எழும். அரசியல்வாதிகள் விமர்சிப்பார்கள். ஆனாலும் இது என் கருத்து. எனக்கு அரசியல் செம போர்.
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
ஆசிரியர் தினம்
ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆசிரியர் தின நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், ஆசிரியர் தினம்! இந்தியத் திருநாடு முழுமையிலும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் பெருமைகளைப் போற்றிப் புகழும் திருநாள்!
பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடராய் எழுந்திட முடியும்.
அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை அவனிக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்” மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியராகப் பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை அணிசெய்த டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்!
இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இந்நன்னாளில் மத்திய அரசின் விருதினையும், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினையும் பெற்று மகிழும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
வியாழன், 3 செப்டம்பர், 2009
ஆந்திர முதலமைசர் மரணம்
ஐதராபாத்:
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி புதன் கிழமை காலை ஐதராபாத்திலிருந்து சித்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசுவிழாவிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மாயமானது.
ஆந்திர போலீசார் மத்திய பாதுகாப்புப்படையினர் இராணுவ ஹெலிகாப்டருடன் நடத்திய தேடுதல் வேட்டையில் கர்னூல் அருகில் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட ராஜசேகர ரெட்டியின் உடல் ஹெலிகாப்டர் மூலம் கர்னூல் ஆந்திர அதிரடிப்படை போலீஸ் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அவர் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மைதானத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இரவு விடிய விடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர், ஆந்திர முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். இவருடன் பலியான ஆந்திர அரசின் முதன்மைச்செயலாளர் சுப்பிரமணியம்,பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் பாடியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோர் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குபின் தனி விமானத்தில் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை வரை அங்கிருக்கும், பின்னர் மதியம் 2.00 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்குகள் முடிந்தபின்பு முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் புலிவெந்தலா வரவுள்ளனர்.
நடிகர் விஜய் கண்டனம்
சென்னை: சென்னை நகரம் முழுவதும் நடிகர் விஜயை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற நடிகர் விஜயின் தந்தை சந்திரசேரகர் தெரிவித்திருந்தார்.; அவர் காங்கிரஸில் சேர்வது ஊறுதி என்றும், தனி கட்சி தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைனால் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் திராவிடர்கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்.... ''இளய தளவதியே! நம்பிவந்த ரசிகர்களுக்குத் துரோகமா? பல்லாயிரம் ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடிய நடிகர் விஜய் அவர்களே! தமிழினப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுடன் நட்புக்கரமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர். "என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி குறித்து நடிகர் விஜயின் கவனத்திற்க கொண்டுசென்றுள்ளோம் அவர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்வோம் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். |
| |
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
போலீஸ்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திர பாபு நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக அதிரடிப்படை, சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
தமிழக வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.
வனப்பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி நடந்து வருகிறது என்று கூறினார்.
புதன், 26 ஆகஸ்ட், 2009
நடிகர் விஜய் அரசியல் அவநம்பிக்கை

சென்னை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில். ''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார். இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார். ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
புதன், 19 ஆகஸ்ட், 2009
கிரிக்கெட் சச்சின்
டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளை காக்க சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 20 ஓவர் போட்டிகள் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் போட்டிகளுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. . டெஸ்ட் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹாட்லி, 20 ஓவர் போட்டியின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என்று எச்சரித் திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின் போது சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ரேகர், லலித் மோடி, ஹர்ஷா போக்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழிகள் பற்றி பேசினர்.நிகழ்ச்சியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசும் போது கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காப்பதற்கான ஒரே வழி சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவது தான். எனக்கு 10 வயதாகஇருந்த போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை காண்பதற்காக சென்றேன். கிரிக்கெட் வாரியம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள சிறந்த மாணவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காணும்படி செய்ய வேண்டும்.
எல்லா இளைஞர்களுக்குமே இந்தியா சார்பில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனவே இளைஞர்களை கவர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழி. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரசிய மிக்கதாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார். அதே போல டெஸ்ட் போட்டிகளை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
வியாழன், 23 ஜூலை, 2009
சினிமா
உலக அழகியும், பிரபல இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
இது குறித்து மும்பை ஊடகங்கள் சிலவற்றில், ஐஸ்வர்யா ராய் தனது அழகான ஒல்லி தேகத்தை தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், கணவர் அபிஷேக் பச்சனிடம், குழந்தை பெறமாட்டேன் என்று நிபந்தனை விதித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
மேலும், தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவேண்டும் என்றால், அதற்கு மெலிந்த உடல்வாகு அவசியம் என்று ஐஸ்வர்யா ராய் கணவரிடம் குறிப்பிட்டதாகவும், அதற்கு அபிஷேக் பச்சனும் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியைப் படித்ததும் ஐஸ்வர்யா ராய் கொதித்தெழுந்து விட்டார். உடனடியாக தனது சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
’’ஐஸ்வர்யாராய் பற்றியும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஊடகங்களில் வெளியான அடிப்படை செய்திகள் ஆதாரமற்றவை. பொய்யானவை. பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் இது போன்ற அறிக்கைகளுக்கு தகுந்த பதிலடி தராமல் விடமாட்டோம். இனியும் அவர் சும்மா இருக்க மாட்டேன்.
இதற்கான அர்த்தத்தை புரிந்து கொண்டு இனியும், இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மாறாக ஏதாவது துண்டு செய்தியோ, கட்டுரைகளோ அவரைப் பற்றி அவதூறாக வெளியிட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் பற்றி விமர்சிக்கும்போது அவர் ஒரு தென்னை மரத்தை திருமணம் செய்து கொண்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. அதுபற்றி அவர் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து விட்டார். இப்படி அவர் அமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஐஸ்வர்யா ராய்க்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே திருமணம் நடந்தது. தனது திருமணத்துக்கு பின்னும் அவர் தொழில் ரீதியாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் சினிமா நட்சத்திரம் என்பதோடு மட்டுமின்றி நமது கலாசாரப்படி ஒரு மகளாகவும், மனைவியாகவும், மருமகளாவும் இருந்து நமது சமூகத்தின் மதிப்புகளை பின்பற்றி வருகிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது’’என்று கூறப்பட்டுள்ளது.
சனி, 11 ஜூலை, 2009
நிரழிவு
நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு
அண்மையில் நீரிழிவு தொடர்பான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.
சூரிய கிரகணம்
22ல் தேதி முழு சூரிய கிரகணம் தெரியும்
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் 22ம் தேதி நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம் குறித்து தெரிவித்துள்ளது.
’’மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சூரிய கிரகணம், வரும் 22ம் தேதி நிகழும். அதிகாலை 5 மணி 28 நிமிடத்திற்கு கிரகணம் துவங்கி, 10 மணி 42 நிமிடத்திற்கு முடிவடைகிறது.
இந்தியாவின் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், எஞ்சியுள்ள பகுதிகளில்( சென்னை உட்பட) பகுதி சூரிய கிரகணமாகவும் தெரியும்.
சென்னையில் அன்றைய தினம், சூரிய உதயம் காலை 5 மணி 52 நிமிடங்களுக்கு ஏற்படுகிறது. சென்னையில் கிரகணத்தின் உச்ச நிலை, 6 மணி 21 நிமிடத்திற்கு உணரப்படும். அப்போது 69 சதவீத சூரியன், சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும்.
காலை 7 மணி 18 நிமிடத்திற்கு கிரகணம் முடிவடைகிறது. இதேபோன்று பகுதி சூரிய கிரகண நிகழ்வு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி நடக்கும். இந்த கிரகணமும் சென்னையில் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளது
தமிழ் சினிமா
விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.
இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.
படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.
சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.
வெள்ளி, 10 ஜூலை, 2009
கிரிகெட்
புக்கனனுக்கு கங்குலி கண்டனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜான்புக்கனன் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு கிரிக்கெட்டின் எதிர்காலம்; டுவென்டி 20 கிரிக்கெட்டின் எழுச்சி' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டோரை 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்திய அவர், கங்குலி பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜான்புக்கனனின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கங்குலி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கவாஸ்கரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை புக்கனன் தனது புத்தகத்தில் குறை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள், இந்தியர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்வது நமக்கு பழக்கமாகி விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. இதனை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
அந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை. சில பகுதிகளை இணையதளத்தில் வாசித்தேன். அவரது விமர்சனங்கள் தேவையில்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். இது போன்ற விஷயங்களை அவர் எழுதியிருக்கக்கூடாது. இவ்வாறு கங்குலி கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் செய்யவில்லை. வெளியான தகவல்கள் எல்லாமே ழூகங்கள் தான்' என்று மற்றொரு கேள்விக்கு கங்குலி பதில் அளித்தார்.

