skip to main |
skip to sidebar
ஆணவம்
சூர்யா, ஜோதிகா நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்க ஐகோர்ட்டில் மனு நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா வாங்கியுள்ள நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்கக்கோரி அமெரிக்காவில் வசிக்கும் அசோக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராயநகர், சரவண முதலி தெருவில் சுமார் 8 1/2 கிரவுண்டு நிலம் சரவண முதலியாருக்கு சொந்தமானது. இவர் எழுதிய உயில்படி இந்த சொத்துக்கள் அவரது 3 பேரன்களுக்கு போய் சேரவேண்டும். அவரது மறைவுக்கு பிறகு இந்த உயிலும் ஐகோர்ட்டில் நிறைவேற்றப்பட்டது. அவரது பேரன்களில் ஒருவராகிய அம்பாசங்கரின் மகன்தான் நான். எனது தந்தை இறந்துவிட்டதால், எனது 2 சித்தப்பாக்கள், எங்கள் அப்பாவுக்கு சேரவேண்டிய நிலத்தை விற்றுவிட்டனர்.இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த நிலத்தை வாங்கிய என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனம் ஒன்று, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோருக்கு விற்றுள்ளது எனக்கு தெரிய வந்துள்ளது.தற்போது சூர்யா அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த சொத்தில் ஆறில் ஒரு பங்கு எனக்கும் உண்டு. இந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருப்பதால் சூர்யாவையும், ஜோதிகாவையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.மேலும் கட்டுமான பணியை நிறுத்த தடை விதிக்க வேண்டும். இந்த சொத்தில் ஆறில் ஒரு பகுதி எனக்கு உண்டு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக