வெள்ளி, 13 நவம்பர், 2009

விண்வெளி

சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா? அங்கு தண்ணீர் இருக்கிறதா? காற்று இருக்கிறதா? என்று கண்டறிய இந்தியா `சந்திரயான்-1 என்ற செயற்கை கோளை நிலவுக்கு அனுப்பியது.

அதில் இந்த கண்டு பிடிப்புகளை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்க `சாரா' என்ற கருவி அனுப்பப்பட்டது. அது சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்து பூமிக்கு தெரிவித்தது.

தற்போது சந்திரனில் காந்த சக்தி இருப்பதையும் `சந்திரயான்-1' புதிதாக கண்டு பிடித்துள்ளது. இந்த தகவலை சந்திரயான்-1 செயற்கை கோளுடன் அனுப்பப்பட்டுள்ள `சாரா' என்ற கருவியின் முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரியும், விஞ்ஞானியுமான அனில் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக