வெள்ளி, 10 ஜூலை, 2009

கிரிகெட்



புக்கனனுக்கு கங்குலி கண்டனம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் ஜான்புக்கனன் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு கிரிக்கெட்டின் எதிர்காலம்; டுவென்டி 20 கிரிக்கெட்டின் எழுச்சி' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதில் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்டோரை 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர்கள் என்று விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்திய அவர், கங்குலி பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜான்புக்கனனின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கங்குலி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கவாஸ்கரை மட்டுமல்ல இன்னும் நிறைய பேரை புக்கனன் தனது புத்தகத்தில் குறை சொல்லி இருக்கிறார். மற்றவர்கள், இந்தியர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்வது நமக்கு பழக்கமாகி விட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. இதனை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அந்த புத்தகத்தை நான் படிக்கவில்லை. சில பகுதிகளை இணையதளத்தில் வாசித்தேன். அவரது விமர்சனங்கள் தேவையில்லாத ஒன்று என்று நான் நினைக்கிறேன். இது போன்ற விஷயங்களை அவர் எழுதியிருக்கக்கூடாது. இவ்வாறு கங்குலி கூறினார்.

பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் எந்த முடிவும் செய்யவில்லை. வெளியான தகவல்கள் எல்லாமே ழூகங்கள் தான்' என்று மற்றொரு கேள்விக்கு கங்குலி பதில் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக