22ல் தேதி முழு சூரிய கிரகணம் தெரியும்
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் 22ம் தேதி நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணம் குறித்து தெரிவித்துள்ளது.
’’மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சூரிய கிரகணம், வரும் 22ம் தேதி நிகழும். அதிகாலை 5 மணி 28 நிமிடத்திற்கு கிரகணம் துவங்கி, 10 மணி 42 நிமிடத்திற்கு முடிவடைகிறது.
இந்தியாவின் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், எஞ்சியுள்ள பகுதிகளில்( சென்னை உட்பட) பகுதி சூரிய கிரகணமாகவும் தெரியும்.
சென்னையில் அன்றைய தினம், சூரிய உதயம் காலை 5 மணி 52 நிமிடங்களுக்கு ஏற்படுகிறது. சென்னையில் கிரகணத்தின் உச்ச நிலை, 6 மணி 21 நிமிடத்திற்கு உணரப்படும். அப்போது 69 சதவீத சூரியன், சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டிருக்கும்.
காலை 7 மணி 18 நிமிடத்திற்கு கிரகணம் முடிவடைகிறது. இதேபோன்று பகுதி சூரிய கிரகண நிகழ்வு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி நடக்கும். இந்த கிரகணமும் சென்னையில் தெரியும்’’ என்று தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக