வெள்ளி, 13 நவம்பர், 2009
பாசம்
சென்னை:
சென்னை பழவந்தாங்களை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது மகன் நடராஜன் தன்னை பணம்கேட்டு மிரட்டிவருதவதாகவும், தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடராஜன்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு நடராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மகனை ஜாமீனில் விடுவித்தால் தனது உயிருக்கு ஆபத்து எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று தந்தை கனகராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இடை,இடையே குறுக்கிட்டு பேசிய தந்தை கனகராஜினை நீதிபதி எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி விசாரணையின்போது கனகராஜ் குறுக்கிட்டுபேசியதால் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் விஜயன், நீதித்துறை பதிவாளர் ராமமூர்த்தி ஆகியோரை நீதிபதி சுதந்திரம் அழைத்து, கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
பதிவாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து கனகராஜினை அமையாக இருக்கச் செய்தனர். பின்னர் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுதந்திரம், நடராஜினை திருச்சி காவல்நிலையத்தில் காலை, மாலை நேரில் ஆஜர் ஆகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டார்.
நடராஜின் தந்தையின் குறுக்கீடு காரணமாக நீதிமன்ற விசாரணை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மீனவர்கள்
மாயமான மீனவர்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொண்டார்கள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சுற்றுப்பபகுதியை சேர்ந்த மீனவர்கள் குறித்த தகவல் கிடைத்தது. அவர்கள் கொல்லம், மங்களூர், கோவா பகுதிகளுக்கு சென்று மாதக்கணக்கில் தங்கியிருந்து மீன் பிடிப்பது அவர்களது வழக்கம். அவர்கள் அங்கிருந்த படியே தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர்கள் தொடர்பு கொள்ளாததாலேயே மீனவர்கள் குடும்பங்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டனர். ஆனால் 8 பேரது நிலைமை மட்டும் இன்னும் தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
விண்வெளி
சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா? அங்கு தண்ணீர் இருக்கிறதா? காற்று இருக்கிறதா? என்று கண்டறிய இந்தியா `சந்திரயான்-1 என்ற செயற்கை கோளை நிலவுக்கு அனுப்பியது.
அதில் இந்த கண்டு பிடிப்புகளை துல்லியமாக கண்டறிந்து தெரிவிக்க `சாரா' என்ற கருவி அனுப்பப்பட்டது. அது சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்து பூமிக்கு தெரிவித்தது.
தற்போது சந்திரனில் காந்த சக்தி இருப்பதையும் `சந்திரயான்-1' புதிதாக கண்டு பிடித்துள்ளது. இந்த தகவலை சந்திரயான்-1 செயற்கை கோளுடன் அனுப்பப்பட்டுள்ள `சாரா' என்ற கருவியின் முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரியும், விஞ்ஞானியுமான அனில் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
வியாழன், 12 நவம்பர், 2009
படித்த முட்டாள்

ÙNÁÛ] Y‹R ÙW›¦¥ PÖeP¡P• UVeL ‘ÍÙLy ÙLÖ|†‰ TQ•, SÛL, ÙN¥ÚTÖÁLÛ[ UŸU h•T¥ T½†‰ ÙNÁ\‰.
UVjfV ŒÛX›¥ PÖePŸ
UWÖyzV UÖŒX• ”Ú] ÚWÍÚLÖŸÍ Th‡›¥ Yp†‰ Y£TYŸ ÚRÐWÖÇ (YV‰ 27). FyPoN†‰ PÖePŸ BYÖŸ. CYŸ ÙNÁÛ]›¥ C£eh• R]‰ STŸ ’yPŸ GÁTYÛW TÖŸTR¼LÖL ˜•ÛT GeÍ‘WÍ ÙW›¥ ™X• ÙNÁÛ]eh Y‹‰ ÙLÖz£‹RÖŸ. ÙNÁzW¥ ÙW›¥ ŒÛXV†‡¥ ÚS¼¿ LÖÛX ÙW›¥ Y‹‰ ŒÁ\‰.
A‡¥, C£‹‰ C\jfV TV‚L· AÛ]Y£• C\jf ÙNÁ¿ «yP]Ÿ. ARÁ ‘\h ÙW›¥ÚY ÚTÖ§NÖŸ JªÙYÖ£ ÙTyzVÖL ÚNÖRÛ] ÙNšR]Ÿ. AÚTÖ‰ `GÍ 2' ÚLÖop¥ YÖ¦TŸ J£YŸ UVjfV ŒÛX›¥ C£TÛR LP]Ÿ.
C‰ h½†‰ EP]zVÖL EVŸ A‡LÖ¡Lºeh RLY¥ ÙR¡«eLTyP‰. N•TY CP†‡¼h ÙNÁzW¥ ÙW›¥ÚY ÚTÖ§Í CÁÍÙTePŸ L‹RÚY¨ «ÛW‹‰ Y‹‰ UVjfV ŒÛX›¥ C£‹R YÖ¦TÛW —y| AWr BÍT†‡¡eh pfoÛNeLÖL AÄ‘ ÛY†RÖŸ. Ajh AY£eh ˆ«W pfoÛN A¸eLTyP‰. ARÁ ‘\h AYŸ rVŒÛ]° ‡£•‘]ÖŸ.
C‰ h½†‰ ÚRÐWÖÇ ÚTÖ§NÖ¡P• i½VRÖY‰:-
TQ•, SÛL ÙLÖ·Û[
SÖÁ G]‰ STÛW TÖŸTR¼LÖL “Ú]›¥ C£‹‰ ˜•ÛT GeÍ‘WÍ ÙW›¥ ™X• ÙNÁÛ] Y‹ÚRÁ. ÚS¼¿ ˜Á‡]• CW° 10 U‚V[«¥ B‹‡W UÖŒX• LPTÖ«¥ ÙW›¥ Y‹‰ ÙLÖz£‹R ÚTÖ‰ SÖÁ NÖTÖyÛP ˜z†‰«y| T|eL ÙNÁÚ\Á. AÚTÖ‰ G]‰ TeL†‰ C£eÛL›¥ h|•TUÖL C£‹RYŸL· `‘ÍÙLy' NÖ‘y| ÙLÖz£‹R]Ÿ. G]eh• NÖ‘P ÙLÖ|†R]Ÿ.
B]Ö¥ SÖÁ ÚYPÖ• GÁ¿ i½Ú]Á. B]Ö¥ AYŸL· Y¼“¿†RÚY SÖÁ AYŸL¸P• C£‹R ‘ÍÙLyÛP YÖjf NÖ‘yÚPÁ. p½‰ ÚSW†‡¥ UVjf «yÚPÁ. ARÁ‘\h GÁ] SP‹R‰ GÁÚ\ ÙR¡V«¥ÛX. CÚTÖ‰ BÍT†‡¡›¥ C£efÚ\Á. SÖÁ ÙLÖ| Y‹R ¤.50 B›W• U‡“·[ ÙN¥ÚTÖÁ, ¤.25 B›W• U‡“·[ ÚLUWÖ, A‚‹‡£‹R RjL ÚUÖ‡W•, B›W• ¤TÖš ÙWÖeL TQ• ÚTÖÁ\ ÙTÖ£yLÛ[ LÖQ«¥ÛX.
CªYÖ¿ AYŸ ÚTÖ§NÖ¡P• ÙR¡«†RÖŸ.
«³“QŸ° ÚRÛY
C‰ h½†‰ ÙNÁzW¥ ÙW›¥ ŒÛXV ÚTÖ§Í CÁÍÙTePŸ L‹RÚY¨ i½VRÖY‰:-
UVeL ‘ÍÙLy ÙLÖ·Û[ N•TYjL·, UVeL h¸ŸTÖ]jLÛ[ ÙLÖ|†‰ ÙLÖ·Û[VzT‰ ÚTÖÁ\ N•TYjL· ŒL²‹‰ Y£f\‰. C‰ h½†‰ TV‚Lºeh «³“QŸ° H¼T|• YÛL›¥ ‰|‘WrWjL·, A½«“L· ÚTÖÁ\ÛY AzeLz YZjLTy| Y£f\‰.
JªÙYÖ£ ÙW›¥ ŒÛXV†‡¨• C‰ h½†‰ J¦ÙT£ef›¨• A½«eLT|f\‰. B]Ö¨•, CÛR T¼½ G¥XÖ• LYÛXTPÖU¥ TV‚L· TZeL• C¥XÖRYŸL· ÙLÖ|eh• UVeL ‘ÍÙLy, h¸ŸTÖ]jL· ÚTÖÁ\Y¼Û\ YÖjf NÖ‘|fÁ\]Ÿ. ARÁ ‘\h ÙTÖ£yLÛ[ G¥XÖ• T½ÙLÖ|†‰ «|fÁ\]Ÿ. C‰ ÚTÖÁ\ N•TYjLÛ[ R|eL ÚY|UÖ]Ö¥ TV‚L¸P• «³“QŸop Y‹RÖ¥ Uy|ÚU ˜z•.
CªYÖ¿ AYŸ i½]ÖŸ.
ஆணவம்
சூர்யா, ஜோதிகா நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்க ஐகோர்ட்டில் மனு
நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா வாங்கியுள்ள நிலத்தில் கட்டிடம் கட்ட தடை விதிக்கக்கோரி அமெரிக்காவில் வசிக்கும் அசோக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அசோக், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை தியாகராயநகர், சரவண முதலி தெருவில் சுமார் 8 1/2 கிரவுண்டு நிலம் சரவண முதலியாருக்கு சொந்தமானது. இவர் எழுதிய உயில்படி இந்த சொத்துக்கள் அவரது 3 பேரன்களுக்கு போய் சேரவேண்டும். அவரது மறைவுக்கு பிறகு இந்த உயிலும் ஐகோர்ட்டில் நிறைவேற்றப்பட்டது. அவரது பேரன்களில் ஒருவராகிய அம்பாசங்கரின் மகன்தான் நான். எனது தந்தை இறந்துவிட்டதால், எனது 2 சித்தப்பாக்கள், எங்கள் அப்பாவுக்கு சேரவேண்டிய நிலத்தை விற்றுவிட்டனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த நிலத்தை வாங்கிய என்ஜினீயரிங் கல்லூரி நிறுவனம் ஒன்று, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோருக்கு விற்றுள்ளது எனக்கு தெரிய வந்துள்ளது.
தற்போது சூர்யா அந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த சொத்தில் ஆறில் ஒரு பங்கு எனக்கும் உண்டு. இந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருப்பதால் சூர்யாவையும், ஜோதிகாவையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.
மேலும் கட்டுமான பணியை நிறுத்த தடை விதிக்க வேண்டும். இந்த சொத்தில் ஆறில் ஒரு பகுதி எனக்கு உண்டு என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி, 16 அக்டோபர், 2009
செவ்வாய், 13 அக்டோபர், 2009
australia

கொஞ்சம் கூட தோழமையில்லாத, பாதுகாப்பற்ற நகரங்களாக இந்த இரு நகரங்களையும் வெளிநாட்டு மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள்
மத்தியில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த இரு நகரங்களிலும் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலின் பின்னணியில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு மாணவர்களில்பெரும்பாலானோர் இந்த இரு நகரங்களும் வசிக்கவே லாயக்கில்லாத, பாதுகாப்பற்ற, கொஞ்சம் கூட தோழமை உணர்வு இல்லாத நகரங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் வெளிநாட்டினர் மீது கொஞ்சம் கூட நட்போ, பாசமோ காட்டுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களுக்கு அடுத்த வரிசையில், பெர்த், பிரிஸ்பேன், அடிலைட் ஆகிய நகரங்கள்
வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுவெள்ளி, 9 அக்டோபர், 2009
திருமண நாள்
புதன், 30 செப்டம்பர், 2009
தாய் பாசம்
திங்கள், 28 செப்டம்பர், 2009
பாரசூட்
வியாழன், 24 செப்டம்பர், 2009
மணல் புயல் காற்று{ஆஸ்திரேலியா }]
சிட்னி: ஆஸ்திரேலியாவில் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மணல் புயல் வீசி வருகிறது. இதனால், விமானம் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுவதால், திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி உட்பட பல நகரங்கள் மணல் புயலால் சூழப்பட்டுள்ளன. இதனால், சிட்னி நகர விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. குழந்தைகள், பெரியவர்கள், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் இந்த மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். "மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்' என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.நேற்று முன்தினம் துவங்கிய மணல் புயல் இன்று வரை நீடிக்கும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. விளைநிலங்களில் டன் கணக்கில் மணல் படிந்துள்ளதால், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோதுமை விளைச்சல் இதனால் பாதிக்கப்படுமா என்பது பற்றி இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தான் தெரியும்.
புதன், 23 செப்டம்பர், 2009
குடும்பம் கலைக்கும் விபசாரி {நடிகை }
| |
என்னை அடிக்கட்டும் பார்க்கலாம்... |
|---|
![]() பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரத்தில் வாயையே திறக்காமல் இருந்த பிரபுதேவாவின் மனைவி ரமலத் இப்போது பத்திரிகைகளிடம் தனது குமுறலை வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக கண்ணீரும் கவலையுமாக முன்னணி நாளிதழ் ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், இனிமேலும் என் கணவருடன் நயன்தாராவை பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன் என்று கூறியிருப்பதுதான் அதிர்ச்சி. அந்த பேட்டியில் அப்படி என்னதான் கூறியிருக்கிறார் ரமலத்? ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்? நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன 'நோக்கத்துக்காக' இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும். நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன். மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும். நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்? இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ரமலத். உடனடியாக இந்த பேட்டி குறித்த தகவல் சென்னையில் இருந்து நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் மூலம் போனது. பேட்டியை போனிலேயே படித்து காண்பித்தார்களாம். முழுவதையும் கேட்ட நயன் சொன்ன பதில்தான் டெரர். என்னை அடிப்பேன் என்று அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமலத். இதை வைத்தே நான் அவர் மீது போலீசில் புகார் கொடுக்க முடியும். வருகிற 28 ந் தேதி விஜய் டி.வி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நானும் பிரபுதேவாவும் சேர்ந்து கலந்து கொள்ளப் போகிறோம். முடிந்தால் அங்கு வந்து அடிக்கட்டும் பார்க்கலாம் என்று சவால் விட்டாராம். ஆக, 28 ந் தேதி இருக்கு பஞ்சாயத்து! |
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
கமல்
கமல்-மோகன்லால் நடித்துள்ள உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவை முன்னிட்டு இணையதள செய்தியாளர்களை கமல் இன்று சென்னை சவேரா ஓட்டலில் சந்தித்தார்.உன்னைப்போல் ஒருவனில் வெடுகுண்டு சம்பவங்கள் இடம்பெற்றிருக்குதாமே?
இது வெடிகுண்டு நடக்காத தேசம் அல்ல. இனியும் பெரிய அளவில் நடக்கும். அப்படி நடக்காமல் இருப்பதற்காக ஒரு முன்னெரிக்கை மணி அடிக்கத்தான் வருகிறது உன்னைப்போல் ஒருவன்.
மருதநாயகத்தை தவிர உங்கள் ஏமாற்றம் வேறு என்ன?
என்ன...மருதநாயகம் எனக்கு ஏமாற்றமா. எனக்கு இல்லை. உங்களுக்குத்தான் ஏமாற்றம். என்றாவது மருதநாயகம் வரும். அதனால் உங்களூக்கும் ஏமாற்றம் என்று சொல்ல முடியாது.
விஜய்,அர்ஜூன்,பிரபு என்று வரிசையாக அரசியலுக்கு வருகிறார்களே. உங்களுக்கு ஐடியா இல்லையா?
அரசியல் எனக்கு போரடித்துவிட்டது. அரசியல் பற்றி இவனுக்கு என்ன தெரியும். இவன் எப்படி இப்படி பேசலாம் என்று விமரிசனங்கள் எழும். அரசியல்வாதிகள் விமர்சிப்பார்கள். ஆனாலும் இது என் கருத்து. எனக்கு அரசியல் செம போர்.
வெள்ளி, 4 செப்டம்பர், 2009
ஆசிரியர் தினம்
ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆசிரியர் தின நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
செப்டம்பர் திங்கள் 5ஆம் நாள், ஆசிரியர் தினம்! இந்தியத் திருநாடு முழுமையிலும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களின் பெருமைகளைப் போற்றிப் புகழும் திருநாள்!
பல்கலைக்கழகங்களோடு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சீரிய சிந்தனைகளோடு செயல்படுவதன் மூலம்தான் ஆற்றல் மிக்க அறிவுப்படை தொடர் தொடராய் எழுந்திட முடியும்.
அந்த அறிவுப்படையை உருவாக்கிடும் பெரும் பொறுப்பைக் கடமையாகக் கொண்டு பணிபுரிபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! இந்த ஆசிரியப் பெருமக்களின் அருமையை அவனிக்குப் புலப்படுத்தும் நோக்கில்தான் ஆண்டுதோறும் “ஆசிரியர் தினம்” மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
ஆசிரியராகப் பணி தொடங்கி, இந்த நாட்டின் மிக உயரிய பதவியாகிய குடியரசுத் தலைவர் பதவியை அணிசெய்த டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த பொன்னாளே இந்த ஆசிரியர் தினம்!
இந்நன்னாளில் சீரிய சிந்தனைகளோடு, கூரிய அறிவாற்றல் திறனைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கல்விச் செல்வத்தை வழங்கிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவர் வாழ்விலும் வளம் செழித்து, நலம் பெருகிட எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இந்நன்னாளில் மத்திய அரசின் விருதினையும், தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினையும் பெற்று மகிழும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுகள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
வியாழன், 3 செப்டம்பர், 2009
ஆந்திர முதலமைசர் மரணம்
ஐதராபாத்:
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி புதன் கிழமை காலை ஐதராபாத்திலிருந்து சித்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசுவிழாவிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மாயமானது.
ஆந்திர போலீசார் மத்திய பாதுகாப்புப்படையினர் இராணுவ ஹெலிகாப்டருடன் நடத்திய தேடுதல் வேட்டையில் கர்னூல் அருகில் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட ராஜசேகர ரெட்டியின் உடல் ஹெலிகாப்டர் மூலம் கர்னூல் ஆந்திர அதிரடிப்படை போலீஸ் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அவர் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மைதானத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இரவு விடிய விடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர், ஆந்திர முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். இவருடன் பலியான ஆந்திர அரசின் முதன்மைச்செயலாளர் சுப்பிரமணியம்,பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் பாடியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோர் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குபின் தனி விமானத்தில் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை வரை அங்கிருக்கும், பின்னர் மதியம் 2.00 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்குகள் முடிந்தபின்பு முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் புலிவெந்தலா வரவுள்ளனர்.
நடிகர் விஜய் கண்டனம்
சென்னை: சென்னை நகரம் முழுவதும் நடிகர் விஜயை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற அவரை சந்தித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும், காங்கிரஸ் கட்சி அவரை வரவேற்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு மற்றும் தலைவர்கள் கூறிவந்தனர். இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற நடிகர் விஜயின் தந்தை சந்திரசேரகர் தெரிவித்திருந்தார்.; அவர் காங்கிரஸில் சேர்வது ஊறுதி என்றும், தனி கட்சி தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைனால் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் திராவிடர்கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்.... ''இளய தளவதியே! நம்பிவந்த ரசிகர்களுக்குத் துரோகமா? பல்லாயிரம் ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடிய நடிகர் விஜய் அவர்களே! தமிழினப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுடன் நட்புக்கரமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர். "என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி குறித்து நடிகர் விஜயின் கவனத்திற்க கொண்டுசென்றுள்ளோம் அவர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்வோம் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். |
| |
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
போலீஸ்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக அதிரடிப்படை ஐ.ஜி., சைலேந்திர பாபு நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழக அதிரடிப்படை, சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
தமிழக வனப்பகுதிகளில் அதிரடிப்படையினர் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு, தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.
வனப்பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி நடந்து வருகிறது என்று கூறினார்.
புதன், 26 ஆகஸ்ட், 2009
நடிகர் விஜய் அரசியல் அவநம்பிக்கை

சென்னை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்தித்து பல மணி நேரம் உரையாடினார். தமிழ்நாட்டில் இளைஞர்காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தியின் உத்தரவுப்பட இளைஞர்காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்புப்பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதே நேரம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நடிகர் விஜய் தமிழகத்தின் அனைத்துபகுதிகளிலும் மன்றங்களை நடடித்திவருகிறார்.அண்மையில் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்கத்;தை தொடங்கிவைத்து பேசிய விஜய் தான் அரசியலில் வர ஆர்வமாக இருப்பதாகவும் ஆனால் யோசித்து அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் ராகுல்காந்தியின் விஜயினை சந்திக்க நேரம் ஒதுக்கி டெல்லிவரச்சொல்ல சந்தித்துள்ளார். டெல்லியில் அவர் இருவரும் நீண்ட நேரம் அரசியல் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு உந்து சக்தியாக செயல்படும் அவரின் தந்தை சந்திரசேகரர் விஜய்-ராகுல் சந்திப்பு குறித்து கூறுகையில். ''விஜய்க்கு ராகுல் காந்தி அபாய்ன்மெட்ன் கொடுத்திருந்தார். ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியுடன் விஜய் நீண்ட நேரம் சந்தித்து பேசிய மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.” ஏன்றார். இந்த சந்திப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் தான் தீவிர முயற்சி எடுத்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்ற சொல்லப்படுகிறது. ''நடிகர் விஜயுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பேசியது. தமிழகத்தில் காங்கிரசினை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்று. தமிழகத்தில் காங்கிரசினை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார். ராகுல் - விஜய் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பினை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள்.'' ஏன்றனர் தமிழக காங்கிரஸ் கட்சியினர். விஜயின் இந்த சந்திப்பு தமிழகத்தில் காங்கிரஸின் அரசியல் கணக்கை மாற்றி அமைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர் காங்கிரசினை விஜய் தலைமையில் வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
புதன், 19 ஆகஸ்ட், 2009
கிரிக்கெட் சச்சின்
டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளை காக்க சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 20 ஓவர் போட்டிகள் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் போட்டிகளுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. . டெஸ்ட் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹாட்லி, 20 ஓவர் போட்டியின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என்று எச்சரித் திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின் போது சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ரேகர், லலித் மோடி, ஹர்ஷா போக்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழிகள் பற்றி பேசினர்.நிகழ்ச்சியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசும் போது கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காப்பதற்கான ஒரே வழி சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவது தான். எனக்கு 10 வயதாகஇருந்த போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை காண்பதற்காக சென்றேன். கிரிக்கெட் வாரியம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள சிறந்த மாணவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காணும்படி செய்ய வேண்டும்.
எல்லா இளைஞர்களுக்குமே இந்தியா சார்பில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனவே இளைஞர்களை கவர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழி. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரசிய மிக்கதாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார். அதே போல டெஸ்ட் போட்டிகளை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




