skip to main |
skip to sidebar
ஆந்திர முதலமைசர் மரணம்
ஐதராபாத்:
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்படுகிறது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி புதன் கிழமை காலை ஐதராபாத்திலிருந்து சித்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசுவிழாவிற்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். புறப்பட்ட சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் மாயமானது.
ஆந்திர போலீசார் மத்திய பாதுகாப்புப்படையினர் இராணுவ ஹெலிகாப்டருடன் நடத்திய தேடுதல் வேட்டையில் கர்னூல் அருகில் காட்டுப்பகுதியில் ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட ராஜசேகர ரெட்டியின் உடல் ஹெலிகாப்டர் மூலம் கர்னூல் ஆந்திர அதிரடிப்படை போலீஸ் மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அவர் உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மைதானத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இரவு விடிய விடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர், ஆந்திர முக்கிய பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர். இவருடன் பலியான ஆந்திர அரசின் முதன்மைச்செயலாளர் சுப்பிரமணியம்,பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, பைலட்டுகள் பாடியா, எம்.எஸ்.ரெட்டி ஆகியோர் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்குபின் தனி விமானத்தில் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஐதராபாத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை வரை அங்கிருக்கும், பின்னர் மதியம் 2.00 மணிக்கு மேல் ராஜசேகர ரெட்டியின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் புலிவெந்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்குகள் முடிந்தபின்பு முழு இராணுவ மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் புலிவெந்தலா வரவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக