சென்னை: சென்னை நகரம் முழுவதும் நடிகர் விஜயை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் அண்மையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற அவரை சந்தித்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும், காங்கிரஸ் கட்சி அவரை வரவேற்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு மற்றும் தலைவர்கள் கூறிவந்தனர். இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்ற நடிகர் விஜயின் தந்தை சந்திரசேரகர் தெரிவித்திருந்தார்.; அவர் காங்கிரஸில் சேர்வது ஊறுதி என்றும், தனி கட்சி தொடங்கி காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்றும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதை கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நகரெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைனால் நடிகர் விஜயின் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் திராவிடர்கழகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில்.... ''இளய தளவதியே! நம்பிவந்த ரசிகர்களுக்குத் துரோகமா? பல்லாயிரம் ரசிகர்களைத் திரட்டி ஈழத்தமிழர்களுக்காகப் போராடிய நடிகர் விஜய் அவர்களே! தமிழினப் படுகொலைக்குத் துணைபோன காங்கிரசுடன் நட்புக்கரமா? மனசாட்சியுடன் சிந்திப்பீர். "என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி குறித்து நடிகர் விஜயின் கவனத்திற்க கொண்டுசென்றுள்ளோம் அவர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப நாங்கள் நடந்துகொள்வோம் என்று நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். |
| |
பாசம்
-
சென்னை:
சென்னை பழவந்தாங்களை சேர்ந்தவர் கனகராஜ் இவர் தனது மகன் நடராஜன் தன்னை
பணம்கேட்டு மிரட்டிவருதவதாகவும், தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அளித்த
புக...
16 ஆண்டுகள் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக