புதன், 19 ஆகஸ்ட், 2009

கிரிக்கெட் சச்சின்

கிரிக்கெட் போட்டிகளை காணவரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது: சச்சின் டெண்டுல்கர்
டெஸ்ட் கிரிக்கெட்போட்டிகளை காக்க சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 20 ஓவர் போட்டிகள் செல்வாக்கு பெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டியின் பாரம்பரிய வடிவமான டெஸ்ட் போட்டிகளுக்கு ஆர்வம் குறைந்து வருவதாக கருதப்படுகிறது. . டெஸ்ட் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹாட்லி, 20 ஓவர் போட்டியின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என்று எச்சரித் திருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றின் போது சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ரேகர், லலித் மோடி, ஹர்ஷா போக்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழிகள் பற்றி பேசினர்.நிகழ்ச்சியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசும் போது கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காப்பதற்கான ஒரே வழி சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துவது தான். எனக்கு 10 வயதாகஇருந்த போது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை காண்பதற்காக சென்றேன். கிரிக்கெட் வாரியம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள சிறந்த மாணவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காணும்படி செய்ய வேண்டும்.
எல்லா இளைஞர்களுக்குமே இந்தியா சார்பில் விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. எனவே இளைஞர்களை கவர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பதற்கான வழி. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, பகலிரவு ஆட்டங்களை அறிமுகம் செய்தால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரசிய மிக்கதாக மாற்ற முடியும் என்று தெரிவித்தார். அதே போல டெஸ்ட் போட்டிகளை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக