மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய இரண்டுமே வசிப்பதற்கு பாதுகாப்பே இல்லாத நகரங்களாக ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
கொஞ்சம் கூட தோழமையில்லாத, பாதுகாப்பற்ற நகரங்களாக இந்த இரு நகரங்களையும் வெளிநாட்டு மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு
மாணவர்கள் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
மத்தியில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த இரு நகரங்களிலும் இந்திய மாணவர்களுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலின் பின்னணியில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு மாணவர்களில்பெரும்பாலானோர் இந்த இரு நகரங்களும் வசிக்கவே லாயக்கில்லாத, பாதுகாப்பற்ற, கொஞ்சம் கூட தோழமை உணர்வு இல்லாத நகரங்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள மக்கள் வெளிநாட்டினர் மீது கொஞ்சம் கூட நட்போ, பாசமோ காட்டுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகரங்களுக்கு அடுத்த வரிசையில், பெர்த், பிரிஸ்பேன், அடிலைட் ஆகிய
நகரங்கள் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது